சமூக சேவையாளராக மாறிய KPY பாலாவுக்கு நடிகர் பிளாக் பாண்டி கொடுத்த ஊக்கம்!
விஜய் டி.வி-யின் "கலக்கப்போவது யாரு" (KPY) நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பாலா, இன்று ஒரு நகைச்சுவை கலைஞன் மட்டுமல்லாமல், நல்ல உள்ளம் கொண்ட சமூக சேவையாளராகவும் திகழ்கிறார். இவர் செய்யும் உதவிகள் சமூக வலைத்தளத்தளங்களில் பேசப்படும் நிலையில், அவரை நடிகர் பிளாக் பாண்டி சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
விமர்சனங்களைக் கடந்து முன்னேறு:
இன்றைய சூழலில் ஒருவர் சமூகத்திற்காகச் செயல்பட்டாலும், அவரை விமர்சிக்க ஆயிரம் பேர் இருப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய பிளாக் பாண்டி, KPY பாலாவுக்கு மனதளவில் ஊக்கமளிக்கும் விதமாகப் பேசியுள்ளார்:
“பாலா செய்யும் உதவிகளைப் பார்த்து, அதை விமர்சிக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஆயிரம் பேர் பேசுவார்கள், குறை சொல்வார்கள். ஆனால், அதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை பாலா. நீ முன்னேறி போய்ட்டே இருக்கணும்.”
ரஜினி, விஜய், அஜித் போல வரவேண்டும் – பிளாக் பாண்டியின் கோரிக்கை:
மேலும் பேசிய பிளாக் பாண்டி, KPY பாலா ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற பெரிய ஆட்களைப் போல முன்னேற வேண்டும் என்று வாழ்த்தியதுடன், தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்:
- **"பேசும் போது மற்றவங்கள இழிவு படுத்தாமல் மட்டும் பேசிடு பாலா."**
- **"மேலும் ரஜினி, விஜய், அஜித் மாதிரி பெரிய ஆளா வரணும் பாலா.**
KPY பாலாவின் சமூக சேவை குறித்தும், பிளாக் பாண்டியின் கோரிக்கை குறித்தும் உங்கள் கருத்து என்ன? கமெண்ட் செய்யுங்கள்!
0 Comments