Subscribe Us

இந்தியாவின் 3வது பெரிய பாலம்: கோவை மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்!

தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் இன்று திறப்பு; இது இந்தியாவின் 3வது பெரிய தரைவழி மேம்பாலம் என்ற பெருமையைப் பெறுகிறது!

உலகிலேயே மிக நீளமான மேம்பாலங்களில் ஒன்றான, கோவையில் அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ. நீளத்துக்குக் கட்டப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய பாலம்:

கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்ட இந்த அவிநாசி சாலை மேம்பாலம், தமிழகத்தின் மிக நீளமான பாலம் மட்டுமல்லாமல், இந்தியாவின் 3-வது பெரிய தரைவழி மேம்பாலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

inaugurated இன்று திறப்பு விழா:

ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டு, கோவையின் புதிய அடையாளமாகத் திகழும் இந்த மேம்பாலத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கோல்டுவின்ஸ் பகுதியில் திறந்து வைக்கிறார்.

திறப்பு விழாவுக்குப் பின், முதல்வர் காரில் பயணித்தபடி பாலத்தைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு, பொது மக்கள் வாகனப் போக்குவரத்துக்கு பாலம் அனுமதிக்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி, இந்த மேம்பாலம் முழுவதுமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


இந்த மேம்பாலம் கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments