Subscribe Us

கரூர் சம்பவத்தால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த சோதனை!

விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிரம்மாண்ட ரோடு ஷோவுக்கு, கரூர் சம்பவத்தை மேற்கோள் காட்டி போலீசார் தடை விதிப்பு!

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அரசியல் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உயர்த்தியுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி ரோடு ஷோ தடை

 ரோடு ஷோவுக்குத் தடை:

ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, நாளை விசாகப்பட்டினம் செல்கிறார். அங்கு அவருக்குப் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, தமிழ்நாட்டில் கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாகக் கூறி, போலீசார் ரோடு ஷோவுக்குத் தடை விதித்துள்ளனர்.

கரூர் சம்பவம் குறித்த வழக்குகள்:

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கரூர் சம்பவத்தின் விளைவாக, அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மீதான பாதுகாப்பு விதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments